சிரியா கடற்பரப்பில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்து: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு
Prathees
2 years ago

சிரியா கடற்பரப்பில் குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
உயிர் பிழைத்த 20 பேர் சிரியாவின் டார்டஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான போது படகில் 120-150 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
லெபனான்இ சிரியா மற்றும் பாலஸ்தீன நாட்டினர்இ பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொண்ட குழு ஒன்று அங்கு சென்றுள்ளது.
சைப்ரஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது கப்பல் விபத்துக்குள்ளானதாகவும்இ விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.



