சீனாவினால் வழங்கப்பட்ட மருந்துப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன
Prathees
2 years ago

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 650 மில்லியன் ரூபா பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்றிரவு சீனாவின் விசேட சரக்கு விமானம் மூலம் குறித்த மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் கையிருப்பு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நாட்டில் தற்போது கிடைக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்குப் பயன்படுத்துவதற்காக சீனா கையிருப்பை இலவசமாக வழங்கியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம் விமான சரக்கு பிரிவில் தரையிறங்க முடியாத நிலையில்இ மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பு இன்று காலை சுகாதார அமைச்சின் மத்திய களஞ்சிய வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.



