அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்

Mayoorikka
2 years ago
அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து இடைநிறுத்தம்

வடக்கு  ரயில்வே மார்க்கத்தில் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.

இந்தியாவின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்கிற்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன் காரணமாக ஜனவரி மாதம் முதல் 5 மாதங்களுக்கு அநுராதபுரம் தொடக்கம் ஓமந்தை வரையான ரயில் போக்குவரத்து  இடைநிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து  அநுராதபுரம் வரை ரயில் மூலம் பயணிக்கும்  பயணிகள், அங்கிருந்து ஓமந்தை வரை பயணிப்பதற்காக பஸ்கள் ஒழுங்கு செய்யப்படவுள்ளன.

பின்னர் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை செல்வதற்கான ரயில் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படவுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!