நிவாரணத்திற்கு பதிலாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது!

Mayoorikka
2 years ago
நிவாரணத்திற்கு பதிலாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது!

இன்று தாங்க முடியாத அளவு மின் கட்டணம் அதிகரித்துள்ளதாகவும், இது தொடர்பில் சமூகத்தில் பீடனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

குறிப்பாக மதத் தலைவர்கள் குழுவொன்று தான்னைச் சந்தித்ததாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் மதஸ்தலங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பாரதூரமானது எனவும் அவர் தெரிவித்தார்.


நாடு வக்குரோத்து நிலையிலுள்ள போதும், அதனை முறையாகவும் திட்டமிட்டுச் செய்தால் இந்நாட்டின் அத்தியாவசியமான துறைகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட மூலங்களைப் பெறுவதற்கு சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் இது தொடர்பாக அரசாங்கத்திடம் எந்த வித வேலைத்திடமும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மாறாக, அரசாங்கம் மதத் தலைவர்கள் உள்ளிட்டவர்களை விமர்சித்து வருவதாகவும்
அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில்,மக்கள் சார், மக்களை மையமாகக் கொண்ட மறுசீரமைப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,வழங்க முடியுமான நிவாரணத்தைக் கூட வழங்காமல் மக்கள் மீது சுமையை ஏற்றுவது தான் இன்று நடந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!