இலங்கை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தீர்ப்பு!
Mayoorikka
2 years ago

இலங்கை, சிரியா, மெக்சிக்கோ ஆகிய நாடுகள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டன என பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை குறித்த தனது தீர்ப்பில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அரசாங்கம் தனது செயல்பாடுகள் மற்றும் புறக்கணிப்புகளால் வாழ்வதற்கான உரிமை கருத்து சுதந்திரம் மற்றும் அரசியல் கருத்துக்களின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படாமை ஆகியவற்றுக்கான சுதந்திரத்துக்கான உரிமை ஆகியவற்றை மீறியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.



