நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சித்த இருவர் கைது

கெசல்வத்த பிரதேசத்தில் கொலை முயற்சி தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 8ஆம் திகதி கெசல்வத்த பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக் கொல்ல முயற்சித்த இருவரையும் நேற்று (19) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்படி, கொலன்னாவ பகுதியில் பதுங்கியிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 07 கிராம் 945 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணையில் மேற்படி துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி மற்றும் 2 உயிருள்ள தோட்டாக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்படி குற்றத்திற்கு உதவிய குற்றத்திற்காக இரண்டாவது சந்தேக நபர் குணசிங்கபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட போது, சந்தேக நபரிடம் இருந்து 6 கிராம் 720 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கெசல்வத்த மற்றும் குணசிங்கபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர்களாவர்.
சந்தேகநபர்கள் இன்று (20) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



