ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை அரசாங்கம் வழங்க வேண்டும்
Prathees
2 years ago

அடுத்த பருவகாலம் வரை ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபா உத்தரவாத விலையை வழங்க அரசாங்கம் உழைக்க வேண்டும் என நாட்டின் முன்னணி அரிசி வியாபாரியான மித்ரபால லங்கேஸ்வரா தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், அவ்வாறு செயற்படாவிட்டால் எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் மனமுடைந்து நெற்செய்கையை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.
ஒரு கிலோ அரிசிக்கு 150 ரூபா உத்தரவாத விலை நிர்ணயிக்கப்பட்டாலும், அரிசியின் விலை உயர்வைத் தடுப்பதற்கு அரசாங்கம் தேவையான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.



