அம்பேவெல அரச பால் தொழிற்சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் எரிபொருள் மோசடி தொடர்பில் முறைப்பாடு!

Mayoorikka
2 years ago
அம்பேவெல அரச பால் தொழிற்சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் எரிபொருள் மோசடி தொடர்பில் முறைப்பாடு!

அம்பேவெல அரச பால் தொழிற்சாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் எரிபொருள் மோசடி தொடர்பில் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக்க பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக்க பெரேரா இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இவ்வாறு முறைப்பாடொன்றினை பதிவு செய்துள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மில்கோ நிறுவனத்தின் தலைவர் தனது முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே எரிபொருள் மோசடியானது இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் தற்போது உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மில்கோ நிறுவனத்தின் தலைவர் ரேனுக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!