சிங்கப்பூரில் Apple சாதனங்கள் பயன்படுத்துபவர்களுக்கு அவசர அறிவிப்பு

#Singapore
Prasu
2 years ago
சிங்கப்பூரில் Apple சாதனங்கள் பயன்படுத்துபவர்களுக்கு அவசர அறிவிப்பு

Apple பயனீட்டாளர்கள், சாதனங்களை உடனடியாகப் புதுப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SingCert எனும் சிங்கப்பூர்க் கணினி நெருக்கடிக்கால நடவடிக்கைக் குழு இந்த ஆலோசனையை விடுத்துள்ளது.

iPhone கைத்தொலைபேசிகளிலும் Mac கணினிகளிலும் உள்ள பலவீனத்தைப் பயன்படுத்தி ஊடுருவல் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டது.

தாக்குதல்காரர்கள் சாதனங்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்று குழு குறிப்பிட்டுள்ளது.

zero-day என்று அழைக்கப்படும் பாதுகாப்புக் குறைபாட்டைச் சீர்செய்யும் மென்பொருளை Apple நிறுவனம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

பாதுகாப்புக் குறைபாட்டைச் சாதகமாகப் பயன்படுத்தி ஊடுருவல் தாக்குதல்கள் நடத்தப்பட்டது குறித்து தகவல் பெற்றுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Apple சாதனங்களுக்கான ஆக அண்மை மென்பொருள்

  • Monterey Mac கணினிகளாக இருந்தால் - macOS Monterey 12.6
  • Big Sur Mac கணினிகளாக இருந்தால்-  macOS Big Sur 11.7
  • iPhone 8உம் அதற்கு பின்னும் வந்த கைத்தொலைபேசிகளாக இருந்தால் -  iOS 16
  • iPhone 6sஉம் அதற்கு பின்னும் வந்த கைத்தொலைபேசிகளாக இருந்தால் - iOS 15.7 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!