மைதானம் அருகே அடையாளம் தெரியாத சடலம் மீட்பு
Prathees
3 years ago
மத்துகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட களுத்துறை மத்துகம பிரதான வீதியில் யதோலவத்த லியனாராச்சி விளையாட்டரங்கிற்கு அருகில் உள்ள கால்வாயில் இன்று (13) பிற்பகல் நபர் ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டதாக மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், அவருக்கு சுமார் 75 வயது இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபரின் மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சடலம் சுவாசரிய அம்புலன்ஸ் மூலம் வெட்டேவ பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.