போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆதிவாசிகளின் தலைவர்

Kanimoli
2 years ago
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து  சித்திரவதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஆதிவாசிகளின் தலைவர்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார்.

தம்பன கொடபாகினிய கிராமத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிரான தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு அவர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தவறு நடந்திருந்தால் தகுந்த தண்டனை வழங்குவது நியாயம், ஆனால் அவர்களை நீண்ட காலம் காவலில் வைத்து உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!