சுக் (Zug) வாழ் மக்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல் 

Reha
3 years ago
சுக் (Zug) வாழ் மக்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல் 

சுக் (Zug) வாழ் அன்பர்களே,

சுக் மானிலத்தில் வீடு வாடகைக்கு எடுப்பது மிகக்கடினமாக உள்ளது. அப்படி கிடைத்தாலும் 3 அல்லது 4 அறை (Zimmer Wohnung) 2500.- ல் இருந்து 4000.- வாடகை வரை உள்ளது. இந்த தொகை கட்டி சுக்கில் வாழ எல்லோராலும் இயலாது என்பதே உண்மை. இதனை எதிர்த்து SP கட்சி Stadt Zugல் 2000 வாடகை குறைந்த வீடுகள் (Preisgünstige Wohnungen) கோரி ஒரு Initiative ஆரம்பித்துள்ளனர். 

இதைப்போன்று 1981ல் SP கட்சி 400 வீடுகள் கோரி மக்களிடம் கையெழுத்து வேண்டப்பட்டது. அன்று மக்களின் ஆதரவினாலும், SP அரசியல் கட்சியின் அழுத்தத்தினாலும் சுக்கில் 400 வாடகை குறைந்த வீடுகள் கட்டப்பட்டது. அதேபோன்று 2000 வாடகை குறைந்த வீடுகள் கட்ட மீண்டும் ஒரு முயர்ச்சியில் SP கட்சி இறங்கியுள்ளனர். ஏனெனில் தற்போது Stadt Zugல் 31'000 மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இவ் அரசாங்கத்தின் கருத்துக்கணிப்பின் படி 2040ல் 45'000 ஆக மக்கள் தொகை அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அப்படியானால் இனி வரும் எதிர்காலங்களில் யாரால் இவ்வகை அதிகூடிய வாடகை கட்டி இங்கு வாழ முடியும்? 

இது வரையும் 1000 க்கு மேற்பட்ட  Zug வாழ் பிரஜா உரிமை உடைய மக்கள் அவர்கள் ஆதரவை தந்துள்ளனர். நீங்களும் இதனை ஆதரிக்க நினைத்தால், அதற்கான படிவத்தில் உங்கள் கையெழுத்தை வழங்கவும்.  

இவ்விடயத்தை பற்றி மேல் அதிக விபரங்கள் அறிய விரும்பினால் Stadt Zug SP கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும்மான Rupan Sivaganesan னுடன் தொடர்பு கொள்ளவும்.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4