உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை!
Mayoorikka
2 years ago

உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அந்த பொறிமுறையின் ஊடாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு முடிவு காண அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவித்தார்.
ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பங்கேற்கவுள்ளது.



