அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இலங்கை: கடுமையான அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள ஆணையாளர்

Mayoorikka
2 years ago
அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத இலங்கை: கடுமையான அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள ஆணையாளர்

அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாததை சுட்டிக்காட்டும் கடுமையான அறிக்கையை ஜெனீவா அமர்வில் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொருளாதார குற்றங்களிற்கு பொறுப்புக்கூறல் என்ற புதிய விடயத்தையும் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் இணைத்துக்கொண்டுள்ளார் ரொரி முங்கொவன் தலைமையிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழு இலங்கையில் காணப்படும் நிலவரம் குறித்து ஆராய்வதற்காக கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் எதிர்வரும் அமர்வில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட குழுவின் அவதானிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவேண்டிய அறிக்கை செப்டம்பர் 12ம் திகதி மனித உரிமை பேரவையின் 51வது அமர்வின் ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்படும். 

இந்த அறிக்கையின் நகல்வடிவத்தினை 26 ம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் கொழும்பிற்கு அனுப்பிவைத்த அதேவேளை அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. 

இலங்கைக்கு இந்த அறிக்கையை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைப்பதற்கு இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ள வெளிவிவகார அமைச்சக வட்டாரங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் அரசாங்கம் பதிலை அனுப்பிவைக்கும் எனவும் தெரிவித்துள்ளன. 

அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாததை சுட்டிக்காட்டும் கடுமையான அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார அரசியல் சவால்களை ஏற்றுக்கொண்டுள்ள அறிக்கை பொருளாதாரம் தொடர்பில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களிற்கும் பொறுப்புக்கூறலின்மையே காரணம் என தெரிவிக்கின்றது. 

பொருளாதார குற்றங்களிற்கு பொறுப்புக்கூறல் என்ற புதிய பதத்தை அறிக்கை முன்வைத்துள்ளது. சர்வதேச ஆதாரங்கள் சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் குறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணையாளர் கடந்த ஆறு முதல் பத்துமாதங்களில் இந்த விடயத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து தெரிவித்துள்ளார். 

ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான வன்முறை மற்றும் மே 9 திகதி அவர்களிற்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை குறித்தும் குறிப்பிடுகின்றது. 

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஆர்ப்பாட்ட தலைவர்கள் தன்னிச்சையாக கைதுசெய்யப்பட்டமை குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டமை குறித்து சுட்டிக்காட்டியுள்ளதுடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது குறித்து ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!