ஐ.எம்.எவ் உடன்படிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க கோரிக்கை
Mayoorikka
2 years ago

சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கையை எதிர்வரும் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொது நிதிக் குழுவின் தலைவருமான ஹர்ஷ டி சில்வா இந்த கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அவ்வாறு செய்யத் தவறினால், பொது நிதிக் குழுவின் தலைவர் என்ற தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆவணத்தை வெளிக்கொணருவேன் என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.



