இலங்கை வெளிவிவகார அமைச்சு நீதியமைச்சின் ஆதரவுடன் வெளிநாட்டு ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் நடவடிக்கை
Kanimoli
2 years ago

இலங்கை வெளிவிவகார அமைச்சு நீதியமைச்சின் ஆதரவுடன் வெளிநாட்டு ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தமிழர் சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு சேவையாற்றுவதை நோக்கமாக கொண்டு இந்த அலுவலகத்தை அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வெளிநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் பணிகள் கிட்டத்தட்ட பூர்த்தியாகியுள்ளதோடு, அதன் பின்னர் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை இந்த அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.



