ரஷ்யாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா கடந்த 24 மணி நேரத்தில் 92 பேர் உயிரிழப்பு
#Russia
#Covid 19
Prasu
2 years ago

ரஷ்யாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ரஷ்யாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500 ஆயிரத்தி 953 ஆக இருந்தது. இந்நிலையில் 2-வது நாளாக நேற்றும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 92 பேர் கொரோனா தொற்றினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் முதல் முறையாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



