இலங்கை மக்களுக்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு வழங்குமாறு பத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை
Kanimoli
2 years ago

இலங்கை மக்களுக்கு எரிபொருள், மருந்து மற்றும் உணவு வழங்குமாறு பத்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கோரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அரசாங்கம் மற்றும் சமந்தா பவாரிடம் குறித்த உறுப்பினர்கள் இது தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கும் போது அவர்களுக்கு ஆதரவளிப்பதே அமெரிக்காவின் கடமை என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிகள் இலங்கைக்கு ஆதரவளித்துள்ளதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.



