கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்று தனக்கு தெரியாதென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தகவல்
Kanimoli
2 years ago

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்று தனக்கு தெரியாதென பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், " கோட்டாபய ராஜபக்ச தனது சுயவிருப்பின் பிரகாரம் நாட்டை விட்டு வெளியேறி, அதிபர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
தற்போது அவர் முன்னாள் அதிபர். முன்னாள் அதிபருக்குரிய வரப்பிரசாதங்கள் அவருக்கு உண்டு.
இந்த நிலையில், அவர் எப்போது நாடு திரும்புவார் என்று எனக்குத் தெரியாது. நாடு திரும்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் அவரே முடிவு எடுக்க வேண்டும் " எனக் குறிப்பிட்டார்.



