இலங்கையில் இன்று இடம்பெற்ற 3ஆவது துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலியானதாக பொலிஸார்

Kanimoli
2 years ago
  இலங்கையில் இன்று இடம்பெற்ற 3ஆவது துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலியானதாக பொலிஸார்

   இலங்கையில் இன்று இடம்பெற்ற 3ஆவது துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலியானதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் எல்பிட்டிய, உருகஸ்மன்ஹந்திய பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கம்பஹா, பட்டபொத்த மற்றும் காலி, அஹுங்கல்ல பகுதிகளில் இன்று (24) பிற்பகல் இடம்பெற்ற இருவேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கம்பஹா, பட்டபொத்தவில் இன்று பிற்பகல் வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரில் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில், 34 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், கட்டட பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் என்றும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காலி, அஹுங்கல்ல, கட்டுவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் நடத்தப்பட்ட இன்னொரு துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் காயமடைந்து பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதேவேளை அண்மைக்காலமாக இலங்கையில் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில்  இன்று மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!