நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் - பிரதமர் தினேஷ் குணவர்தன

Kanimoli
2 years ago
நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் - பிரதமர் தினேஷ் குணவர்தன

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கோட்டை ஶ்ரீ நாக விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக சாதாரண சட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது. எனினும் மேலதிகமாக எவ்வித செயற்பாடுகளையும் எடுக்கவில்லை.

தற்பொழுது நாட்டில் அவசரகாலச் சட்டமும் நீக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் நிலவி வரும் உணவுப் பிரச்சினைக்கு அனைவரும் ஒன்றிணைந்து தீர்வு தேட வேண்டும்.

தன்னிறைவான பொருளாதார கொள்கைகளின் ஊடாக இந்த சவால்களை வெற்றி கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!