இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டம் முன்வைக்கப்படும்
Kanimoli
2 years ago

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் புதிய சட்டம் முன்வைக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.



