நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

#SriLanka #drugs #Arrest
Prasu
2 years ago
நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

நாட்டின் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ

கல்கிஸ்ஸ - ரத்மலானை பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய ஒருவர் எனவும் அவர் ரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதோடு கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்

மிஹிஜயசெவன

மிஹிஜயசெவன - ஹெனமுல்ல பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 420 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய கொழும்பு-14 பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள் .

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!