பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் மற்றும் வர்த்தகர் ஜொனதன் மார்டின்டைன்ஸ் சி.ஐ.டிக்கு அழைப்பு

Prasu
2 years ago
பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் மற்றும் வர்த்தகர் ஜொனதன் மார்டின்டைன்ஸ் சி.ஐ.டிக்கு அழைப்பு

பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் மற்றும் வர்த்தகர் ஜொனதன் மார்டின்டைன்ஸ் ஆகியோர் இன்று (17) சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.  

ஜூலை 9 ஆம் திகதி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டின் மீதான தாக்குதல் குறித்து விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

நாட்டின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்திற்கும், சீரற்ற நிதி நிர்வாகத்திற்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரபல நீச்சல் வீரர் ஜூலியன் போலிங் தாக்கல் செய்த மனுவும் உள்ளடங்கும். 

அம்மனுக்களிலேயே முன்னாள் பிரதமர் மஹிந்த, முன்னாள் அமைச்சர் பசில் உள்ளிட்டோரின் வெளிநாட்டுப் பயணங்கள் தடைச் செய்யப்பட்டுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!