இலங்கையில் பத்து மடங்காக அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளர்கள்: சுகாதார அமைச்சு அறிவிப்பு
Mayoorikka
2 years ago

கடந்த 4 மாதங்களை விடவும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் சுகாதார வழிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
129 கொவிட் தொற்றாளர்கள் நேற்று(15) அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 668,141 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று(15) 3 கொரோனா மரணங்கள் பதிவாகிய நிலையில், கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 16,624 ஆக அதிகரித்துள்ளது.



