அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தலைவர் அல்-ஜவாஹிரியை கொல்ல ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்திய அமெரிக்கா

#America #Missile #Attack
Prasu
3 years ago
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தலைவர் அல்-ஜவாஹிரியை கொல்ல ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்திய அமெரிக்கா

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு தலைவர் அல்-ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரை பல ஆண்டுகளாக அமெரிக்க படை தேடி வந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் காபூல் புறநகர் பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பவரை கண்டுபிடித்தனர். 

இதையடுத்து அவரை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. அல்-ஜவாஹிரி தான் வசித்த வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து அவர் பால்கனி அருகே வரும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். 

அல்-ஜவாஹிரி மீது மட்டும் தாக்குதல் நடத்த வேண்டும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்த அமெரிக்கா, துல்லியமாக தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஹெல்பயர் ஆர் 9 எக்ஸ் ரக ஏவுகணையை பயன்படுத்தியது. 

இந்த ஏவுகணை எம்.க்யூ-9 ரீப்பர் டிரோனில் (ஆளில்லா விமானம்) பொருத்தப்பட்டு கொண்டு செல்லப்படும். அதிநவீன கேமரா உள்ளிட்ட வசதிகளை கொண்ட ஆளில்லா விமானம். இலக்கின் மேலே பறந்து செல்லும். லேசர் கருவி பொருத்தப்பட்ட ஆர் 9 எக்ஸ் ஏவுகணை இலக்கை நோக்கி ஏவப்படும். 

இலக்கின் மீது மோதுவதற்கு முன்பு ஏவுகணையின் பக்க வாட்டில் இருந்தது 6 பிளேடுகள் வெளியாகும். அதன்பின் இலக்கு வைக்கப்பட்ட நபர் மீது மோதும் ஏவுகணை அவரது உடலை துண்டு துண்டாக்கி விடும். ஏவுகணை வெடிக்காது. 

இதன்மூலம் இலக்கு மட்டும் அழிக்கப்படும் மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த நவீன ஏவுகணையை தான் அல்-ஜவாஹிரியை கொல்ல அமெரிக்கா பயன்படுத்தியது. தாக்குதலின்போது அல்-ஜவாஹிரி வீட்டில் அவரது உறவினர்கள் இருந்தனர். 

ஆனால் அவர்கள் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. அல்-ஜவாஹிரி மட்டும் கொல்லப்பட்டார். முதலில் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனால் குண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அதன்பின் ஆர்-9-எக்ஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

அல்-ஜவாஹிரியை கொல்ல இரண்டு ஏவுகணைகள் வீசப்பட்டன. இதற்கு முன்பு ஆர்-9-எக்ஸ் ஏவுகணை முதல் முறையாக கடந்த 2017-ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. 

சிரியாவில் அல்-கொய்தா கமாண்டர் அபு அல்-கைர் அல்-மஸ்ரி காரில் சென்றபோது அந்த விமானம் மீது ஆர்-9-எக்ஸ் ஏவுகணையால் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதில் அவர் கொல்லப்பட்டார். இந்த தாக்குதல் தொடர்பாக புகைப்படங்களில் காரின் மேல்புறத்தில் ஓட்டை இருந்தது. காரின் முன் மற்றும் பின்புறத்தில் எந்த சேதமும் ஏற்பட வில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!