பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான கண்ணீர்ப் புகைக்குண்டொன்றைத் திருடி வைத்திருந்த வாலிபர் கைது

Kanimoli
2 years ago
பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான கண்ணீர்ப் புகைக்குண்டொன்றைத் திருடி வைத்திருந்த வாலிபர் கைது

பொலிஸ் திணைக்களத்துக்குச் சொந்தமான கண்ணீர்ப் புகைக்குண்டொன்றைத் திருடி வைத்திருந்த இன்னொரு வாலிபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக திருடி, தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் நேற்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கடந்த ஜூலை மாதம் 13ம் திகதி நாடாளுமன்றத்தைக் கைப்பற்றுவதற்கான வன்முறை சம்பவத்தின் போது பொலிஸ் திணைக்களத்தின் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் களவாடப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் மூலம் கடந்த நாட்களில் வாலிபர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடமிருந்த கண்ணீர்ப் புகைக்குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ராஜகிரிய, ஒபேசேகரபுர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!