பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்குச் சென்ற இரு இலங்கையர்கள் மாயம்!
Prathees
2 years ago

22 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கையில்இருந்து சென்ற இருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணியின் ஜூடோ வீராங்கனை ஒருவரும் ஜூடோ அணியின் முகாமையாளர் ஒருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பர்மிங்ஹாம் மெடோபொலிடன் பொலிஸார் மற்றும் இலங்கை ஒலிம்பிக் குழு இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக இலங்கை அணியின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.



