இலங்கையில் தென்மேல் பருவக்காற்று காலநிலை காரணமாக தொடர் மழை,வெள்ளம் மற்றும் மண்சரிவு நிலவும் அபாயம்(காணொளி)
Prasu
2 years ago

இலங்கையில் தென்மேல் பருவக்காற்று காலநிலை வீசிக்கொண்டிருப்பதன் காரணமாக தொடர்ச்சியாக கடும்மழை பெய்து வருகிறது.
இதனால் மலையகப்பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதோடு சில இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
வெள்ளஅனர்த்தம் காரணமாக இதுவரை நான்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு மூவர் காணாமல் போயுள்ளனர்.
மேலும் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளுக்கு அனர்த்தகால விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது






