வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் 1.5 மில்லியன் செலவில் S.K. நாதன் அறக்கட்டளையால் அமைக்கப்பட்ட நிரந்தர நீர்த்தாங்கியை S.K.நாதன் அவர்களால் கையளிக்கப்பட்டது.
Prasu
3 years ago

வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் திரு அ.பங்கையற்செல்வன் அவர்களின் வேண்டுதலுக்கு அமைய பாடசாலையின் மாணவர்களின் தேவைக்கேற்ப சில மாதங்களுக்கு முன்னர் 10/02/2022 அத்திவாரமிட்டு ஆரம்பிக்கப்பட்ட நிரந்தர நீர்த்தாங்கி நிறுவுவதற்கான வேலைப்பாடுகள் தொடங்கப்பட்டது.
முன்று தளங்களை கொண்ட இவ் நீர்த்தாங்கி பாடசாலை மாணவர்களின் நீர்த்தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யக்கூடிய வகையில் நிறுவப்பட்டுள்ளது
பாடசாலை முதல்வர் திரு.அரசரட்ணம் பங்கயற்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி கோட்டக்கல்விப்பணிப்பாளர் திரு. தர்மரத்தினம் மற்றும் ஓய்வு நிலை அதிபர் க.இராசேந்திரம், தொழிலதிபர், ஆசிரியர்கள், மாணவச்செல்வங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.








