சந்தையில் வெளியிடப்பட்ட எரிவாயு தொடர்பில் வெளியான தகவல்
Prathees
3 years ago

கடந்த 20 நாட்களில் 22 லட்சம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் தற்போது நிலவும் விலைகளின் படி ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை கணிசமாக குறைக்கப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் விலை குறைப்பு கடந்த எரிவாயு விலை உயர்வின் விலையை விட அதிகமாக இருக்கும் என இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.



