பங்களாதேஷுக்கு சர்வதேச நாணய நிதியம் கைகொடுத்தால் இலங்கைக்கு இன்னொரு நெருக்கடி
Prathees
3 years ago

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பங்களாதேஷுக்கு வழங்கினால் அதற்கு முன்னர் பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகையை இலங்கை செலுத்த வேண்டியிருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ.விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.
தற்போது இந்தியாவும் அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
எனவே, எரிபொருளைப் பெறுவதற்காக இந்தியாவிடம் பெற்ற கடனை இலங்கை உடனடியாக தீர்க்க வேண்டுமா என ஊடகமொன்றின் கேள்விக்கு பதிலளிக்கும்போது, கடனை உடனடியாக மீளப் பெறுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்றார்.



