சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

Kanimoli
3 years ago
சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் பல மூத்தவர்களுக்கு அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன, எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி. ரத்நாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கு அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு மீண்டும் அமைச்சு பதவிகளை கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக கொழும்பு அரசியல் பரபரப்பாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!