வவுனியாவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

Kanimoli
3 years ago
வவுனியாவில் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய குழு ஒன்றினால் குறித்த நபர் இன்று மாலை தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரதே பரிசோதனை அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!