இங்கிலாந்தில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியர்

#UnitedKingdom #Murder
Prasu
3 years ago
இங்கிலாந்தில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்ற செவிலியர்

இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 7 பச்சிளம் குழந்தைகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள செவிலியர் ஒருவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இங்கிலாந்தில்  உள்ள Cheshire எனும் இடத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்படும் வார்டில் பணிபுரிந்து வந்த லூசி (Lucy Letby, 32) என்ற பெண் செவிலியர் 5 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அத்துடன் 5 ஆண் குழந்தைகளையும், 5  பெண் குழந்தைகளையும் கொலை செய்ய முயன்றதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது. 

லூசி தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சூழ்நிலையில், அவர் மான்செஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அக்டோபர் மாதம் 4ம் தேதி லூசி மீதான வழக்கு விசாரணை தொடங்க உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!