அமெரிக்காவின் கெண்டகியில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி

#America #Death
Prasu
3 years ago
அமெரிக்காவின் கெண்டகியில் கனமழை - வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி

அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மேலும் பாதித்துள்ளது. 

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இந்நிலையில், கெண்டகி மாகாணத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகினர். 

தொடர் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 

மின்தடையால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் மூலம் மக்கள் பத்திரமாக மீட்கப்ப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

வெள்ளத்தின் அளவு அதிகரித்து வருவதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அம்மாகாண கவர்னர் தெரிவித்துள்ளார்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!