இலங்கையில் தொடரும் நெருக்கடி -ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிக்கல்
Nila
3 years ago

ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 150 மில்லியன் டொலர்களை கூட வழங்க முடியாது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, எரிபொருள் இறக்குமதிக்கு மாதாந்தம் தேவைப்படும் 550 மில்லியன் டொலர்களை மாற்று முறைகளை பயன்படுத்தி தேட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.



