புதிய பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்
Mayoorikka
2 years ago

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் சுற்றுலாத் துறையில் விரைவான முதலீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் தொடருந்து உள்ளிட்ட போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க இந்திய உயர்ஸ்தானிகர் ஒப்புக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



