சர்ச்சைக்குரிய பதிவுகளை முகநூலில் பதிவிட்ட நபர் கைது
#SriLanka
#Facebook
#Arrest
Prasu
2 years ago
கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகநூல் பதிவை பகிர்ந்தமை மற்றும் பொலிஸாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் எதிராக கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று காலி நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரான காலி கோட்டையைச் சேர்ந்த அஹமட் நிஸ்வர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்த போதிலும், சந்தேக நபரை ஆஜர்படுத்திய மாத்தறை கணினி குற்றப் பிரிவினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.



