S.K.நாதன் அறக்கட்டளையின் நிதிப்பங்களிப்பினால் மலையாளபுரத்தில் 200 குடும்பங்களுக்கு உலருணவு வழங்கப்பட்டது
Kanimoli
2 years ago

S.K. நாதன் அவர்களின் S.K.நாதன் அறக்கட்டளையின் முழுமையான நிதிப்பங்களிப்பினால் இன்று மலையாளபுரத்தை வதிவிடமாக கொண்ட 200 குடும்பங்களுக்கு உலருணவு ( அரிசி ) ஆலய சூழலில் வைத்து இன்றைய தினம் S.K.நாதன் அண்ணா அவர்களினால் வழங்கப்பட்டது
இலங்கையில் தற்காலத்தில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றம், உலருணவுப் பொருட்களுக்கு ஏற்படும் தட்டுப்பாடு, வேலையில்லா பிரச்சினை ஆகியன காரணமாக மக்கள் நாளுக்கு நாள் இன்னல்களை அனுபவித்து வரும் வேளையில் மக்களின் அன்றாடல் வாழ்க்கை செலவு அதிகரித்திருக்கும் நிலையில் மக்களின் அத்தியாவசிய தேவை கருதி உலருணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது
மேலும் பலகட்டங்களாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான உலருணவு கட்டம் கட்டமாக நாதன் அண்ணா அவர்களினால் வழங்கி வைக்கப்படவுள்ளது



