எரிபொருள் வரிசையில் இரண்டு மரணங்கள்
Mayoorikka
3 years ago

எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்களில் மேலும் இருவர் மரணமடைந்துள்ளனர். பெலவத்தை மத்துகமவில் 64 வயதானவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், கிண்ணியாலிலுள்ள எரிபொருள் நிலையமொன்றில் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர்களில் ஒருவர், நேற்று (22) பகல் 12 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
கிண்ணியா முனைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதான முஹமட் ரம்லான் சரீப் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவர், கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாக எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது



