தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுக்கு ஆதரவு
Prabha Praneetha
2 years ago

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கினர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதில் 8 பேர் தமிழ், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.



