சீனாவைவிட அதிகமாக இலங்கைக்கு கடன் வழங்கும் நாடாக இந்தியா!
Prabha Praneetha
2 years ago
.jpg)
இலங்கைக்கு அதிகளவு கடனுதவி வழங்கிய நாடாக சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
இந்த வருடம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாத காலப்பகுதியில், இந்தியா இலங்கைக்கு 376.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
அத்துடன், சீனா 67.9 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை இலங்கைக்கு வழங்கப்பட்ட அகில இந்திய கடன் வசதி சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.



