தென்னாப்பிரிக்கா பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலி

#GunShoot #Death
Prasu
3 years ago
தென்னாப்பிரிக்கா பாரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலி

தென்னாப்பிரிக்கா தலைநகரின் தென்கிழக்கில் ஜோகன்னஸ்பர்க்கின் மிகப்பெரிய நகரமான சோவெட்டோவின் ஆர்லாண்டோ மாவட்டத்தில் பார் உள்ளது. இந்த மதுக்கடையில் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். 

இதில் 14 பேர் கொல்லப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். போலீஸ் அதிகாரி எலியாஸ் மாவேலா கூறியதாவது:- நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அழைப்பு வந்தது. 

அப்போது, பாரில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல் கிடைத்தது. நாங்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, 12 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், 11 பேர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

இதில் மேலும் இருவர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!