பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கையில் அமைதிக்கான வேண்டுகோளை விடுத்துள்ளார்
Kanimoli
3 years ago

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று இலங்கையில் அமைதிக்கான தனது வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் இலங்கை மக்களின் துயரத்தில் "நான் என்னை ஒன்றிணைக்கிறேன்" என்று பாப்பரசர் பிரான்சிஸ் ஞாயிற்றுக்கிழமை வாராந்த பிரார்த்தனையை தொடர்ந்து கூறியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அது தீர்க்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



