இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறியுள்ளது
Kanimoli
3 years ago
இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளை ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக கூறியுள்ளது.
அமைதியான, ஜனநாயக மற்றும் ஒழுங்கான மாற்றத்திற்கு ஒத்துழைக்கவும், கவனம் செலுத்தவும் அனைத்து தரப்பினரையும் தாங்கள் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு தீர்வுகாண வழிவகை செய்து, இயல்பு நிலைக்கு திரும்புவது அனைத்து கட்சி தலைவர்களின் பொறுப்பாகும்.
இலங்கையின் சனத்தொகைக்கான தனது ஆதரவை மேலும் அதிகரிக்க ஐரோப்பிய ஒன்றியம் இருக்கும் தெரிவுகளை மதிப்பீடு செய்து வருகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.