ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு - பலர் படுகாயம் - இருவர் ஆபத்தான நிலையில்
Nila
3 years ago

ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது பல போராட்டக்காரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இதுவரை போராட்டத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கொழும்பில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களில் இராணுவத்தினர், பொலிஸாருடனான மோதலில் சிக்கி 33 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.



