துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே உயிரிழப்பு

Kanimoli
4 years ago
துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் அபே உயிரிழப்பு

துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்தார்.

ஜப்பான் நாட்டின் என்.ஹெச்.கே தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் ஜப்பான்  நாட்டின் முன்னாள் பிரதமர் அபே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு ஜப்பானின் நாரா பகுதியில் முன்னாள் பிரதமர் பேசிக்கொண்டிருக்கையில் மர்ம நபர் ஒருவரால் சுடப்பட்டார். அபே பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அவர் பின் பகுதியிலிருந்து சுடப்பட்டார்.

பின்னர், சம்பவ இடத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

67 வயதான அபே ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமராக இருந்தவர். உடல் நலத்தினைக் கருத்தில் கொண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். 

துப்பாக்கியால் சுட்ட நபரை காவல் துறையினர் சம்பவ இடத்திலேயே மடக்கிப் பிடித்து கைது செய்தனர். பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக கருதப்படும் ஜப்பானில் நடந்த இந்த அசம்பாவிதம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4