இலங்கை சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க புதிய வேலைத்திட்டம்

Nila
3 years ago
இலங்கை சுற்றுலா துறையினருக்கு எரிபொருள் வழங்க புதிய வேலைத்திட்டம்

சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதற்காக சுற்றுலாத்துறை அமைச்சு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இராணுவத்தினருடன் ஒத்துழைப்புடன் புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புக் கொண்டு தங்களது பயண விபரங்களை வழங்க வேண்டும்.

இதனையடுத்து, அவர்களுக்கு தேவையான எரிபொருள் வழங்கப்படும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!