எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலுமொருவர் மரணம்!
Nila
3 years ago

களுத்துறை - பயாகல பகுதியில் எரிபொருளுக்காக காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வரிசையில் காத்திருந்தபோது, சுகயீனமடைந்த குறித்த நபர் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 60 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் வரிசையில் காத்திருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஐ தாண்டியுள்ளது.



